துாத்துக்குடி; துாத்துக்குடியில் டைடல் நியோ பார்க் திறப்பு மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார். இன்று, புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தை அவர் துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வந்தார். இதையடுத்து, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் நேற்று திடீரென வந்தார். கோவில் பேட்டரி காரில் வந்து இறங்கிய அவர் கடற்கரைக்கு சென்று கால் நனைத்தார். பின்னர், கோவிலுக்குள் சென்ற அவர் மூலவர் அபிஷேகம் பார்த்தார். அதன்பின் சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை தரிசனம் செய்து வணங்கினார். இதேபோல, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷும் நேற்று திருச்செந்துார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.