உளுந்தூர்பேட்டை வீர ஆஞ்சநேயருக்கு வடமாலை, வெற்றிலை மாலை சாற்றி பக்தர்கள் வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2024 01:12
உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு வடமாலை, வெற்றிலை மாலை சாற்றப்பட்டன.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவள்ளி தாயார் சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதனையொட்டி சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. சிறப்பு பூஜைகளுடன் தீபாவதனை வழிபாடு நடந்தது. அப்போது சுவாமிக்கு 208 வடமாலையும்,. வெற்றிலை மாலையும் சாற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.