பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 2000 லிட்டர் பால் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2024 01:12
விழுப்புரம்; அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை 2000 லிட்டர் பால் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஹனுமன் ஜெயந்தியை விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ளது 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். இங்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 36 அடி விஸ்வரூப ஜெய மங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிக்கு 2000 லிட்டர் பால் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக உற்சவர் ஸ்ரீராம மூர்த்திக்கு புண்ஹாவசனம், விசேஷ மூலமந்திரம் யாகம் உள்ளிட்டவை நடந்தது. தொடர்ந்து 106 திவ்ய தரிசன நிலங்களுக்கு யாத்திரையாக சென்று பூஜை செய்யப்பட்ட ராமர் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.