மேலூர்; மேலூர் ராமானுஜ பஜனை கூடத்தில் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு டிச. 16 கொடியேற்றப்பட்டது. இன்று வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து புஷ்ப ரதத்தில் சுவாமி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இவ்விழாவில் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.