Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வளையல் அலங்காரத்தில் திருச்சி பகவதி ... திருப்புவனம் அருகே முள் படுக்கையில் பெண் சாமியாரின் தவக்கோலம்; குவிந்த பக்தர்கள் திருப்புவனம் அருகே முள் படுக்கையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுமுகை ஐயப்பன் கோவிலில் தேர் பவனி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிறுமுகை ஐயப்பன் கோவிலில் தேர் பவனி

பதிவு செய்த நாள்

02 ஜன
2025
05:01

மேட்டுப்பாளையம்; சிறுமுகையில் ஐயப்பன் சுவாமி தேர் பவனி நடைபெற்றது.


சிறுமுகை எலகம்பாளையத்தில் கீழ் சபரி ஐயப்பன் கோவிலிலும், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலும் உள்ளது. இக்கோவிலின், 50வது ஆண்டு மண்டல பூஜையும், ஐயப்பன் தேர் பவனியும் நடந்தது. 1ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன், ஐயப்பன் சுவாமிக்கு அஷ்டாபிஷேகமும், லட்சுமி ஹயக்ரீவருக்கு பஞ்சாபிஷேகமும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. இன்று காலை ஐயப்பன் சுவாமிக்கும் லட்சுமி ஹயக்ரீவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. 10.30 மணிக்கு ஐயப்பன் சுவாமியின் தேர்பவனி செண்டை மேளத்துடன் புறப்பட்டது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் பவனி, மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஆலாங்கொம்பை அடைந்தது. அங்கு பக்தர்கள் ஐயப்ப சுவாமியை வழிபட்டனர். அங்கிருந்து தண்ணீர் தடம், எலகம்பாளையம் முருகன் கோவில், ராமர் கோயில் வழியாக தியேட்டர் மேடு வந்தது. அங்கு ஏராளமான பக்தர்கள் ஐயப்ப சுவாமியை வழிபட்டனர். அங்கிருந்து சக்தி சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் சென்றது. அங்கிருந்து சிறுமுகை நகர், நால்ரோடு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த தேர் பவனியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை காலை, 6:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு, 108 கலச பாலாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை அடுத்து சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற உள்ளது. மதியம் அன்னதானமும், மாலை, 6:00 மணிக்கு படி பூஜையும், 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar