தஞ்சாவூரில் மார்கழி பூஜை; விநாயகருக்கு அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கிய முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2025 02:01
தஞ்சாவூர்; தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜ் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மார்க்கெட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் இன்று இப்பகுதியை சார்ந்த முஸ்லிம்கள் சார்பில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், தீபாரதனை காட்டப்பட்டது, இதில் ஏராளமான முஸ்லிம்கள் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். முஸ்லிம்கள்அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்கள். இவ்வாறு100 ஆண்டுகளுக்கு மேலாக மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்று வருவது குறிபிடத்தக்கது.