பதிவு செய்த நாள்
04
ஜன
2025
03:01
மதுரை மாவட்டம் கொடிக்குளத்தில் அருள்கிறார் வேதநாராயணர். இவரை வணங்கினால் படிப்பில் சிறக்கலாம். பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்னும் இரு அசுரர்கள் வேதங்களை பறித்துச் சென்றனர். இதனால் படைப்புத்தொழில் நின்றது. உடனே அசுரர்களை வதம் செய்து வேதங்களை மீட்டார் பெருமாள். வேதங்களை பெற மனித வடிவில் இங்கு வந்து தவம் செய்தார் பிரம்மா. தவத்தால் மகிழ்ந்த பெருமாள் அவருக்கு நாராயணராக காட்சி அளித்து, வேதங்களையும் ஒப்படைத்தார். இதனால் சுவாமி ‘வேதநாராயணன்’ என்ற திருநாமத்தில் இங்கு காட்சி அளிக்கிறார். அருகே ஒரு தலையுடன் வணங்கி நிற்கும் பிரம்மாவையும் பார்க்கலாம். அந்நியப் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் கோயிலின் உற்ஸவரான நம்பெருமாளை, இக்கோயிலுக்கு அருகே உள்ள குகையில் வைத்துதான் பாதுகாத்தனர். தற்போது அந்த இடத்தில் பெருமாளின் பாதம் உள்ளது. இக்கோயில் தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தை தண்ணீரில் கலந்து குளித்தால் தோல் நோய் குணமாகும்.
மதுரை எம்.ஜி.ஆர். பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை செல்லும் ரோட்டில் 10 கி.மீ.,ல் கொடிக்குளம் விலக்கு. அங்கிருந்து 2 கி.மீ.,
நேரம்: காலை 10:00 – 12:00 மணி
தொடர்புக்கு: 98420 24866, 0452 – 2423 444
அருகிலுள்ள தலம்: ஒத்தக்கடை யோக நரசிம்மர் 2 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 11:00 மணி, மாலை 5:00 – 8:00 மணி.