பழநி கோயில் ரோப்கார் இரும்பு கயிறு பொருத்தும் பணி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2012 11:11
பழநி: பழநி கோயில் ரோப்காரில் புதிய இரும்பு கயிறு பொருத்தும் பணி டிச.5-ல் துவங்க உள்ளது. சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட இரும்பு கயிறு ரோப்காரில் பொருத்தப்பட்டது. இதிலிருந்து சப்தம் வரவே கடந்த மாதம் 21-ல் இருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. புதிய இரும்பு கயிறு ராஞ்சியில் இருந்து நேற்று வேகன் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இது டிச.5-ல் பழநி வந்தடையும். மூன்றாவது வின்ச்: கோலார் தங்க வயல் நிபுணர்கள் அல்ட்ரா சானிக் சோதனை செய்த பின் மூன்றாவது வின்சை இயக்கும் மெஷினில் உள்ள சிறிய பல் சக்கரம்(பினியன் வீல்) தேய்மானம் அடைந்தை கண்டுபிடித்தனர். இதனால், இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் கூறுகையில், பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி மூன்று வின்சுகளிலும் தொழில் நுட்ப ரீதியான சோதனைகள் மேற்கொள்ளப்படும். சான்றிதழ் பெற்றபின் மூன்றாவது வின்ச் இயக்கப்படும், என்றார்.