வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை திருப்பணி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2012 11:11
புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை திருப்பணி நேற்றுமுன்தினம் துவங்கியது. இதனையொட்டி மாலை 6.30 மணிக்கு யஜமானர் சங்கல்பம், புண்யாஹம், வாஸ்து சாந்தி, ஆராதனம் ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. இதில், பாரம்பரிய முறைப்படி, மரக்கட்டைகளை உரசியதால் ஏற்பட்ட தீப்பொறியைக் கொண்டு, ஹோமம் வளர்க்கப்பட்டது. நேற்று (29ம் தேதி) காலை 8.30 மணிக்கு ஆராதனம் ஹோமம், பூர்ணாஹூதி, மாலை 5 மணிக்கு புண்யாஹம், சதுர்தஸ கலச ஸ்தபனம், மூர்த்தி ஹோமம் உள் ளிட்டவை நடந்தது. இன்று 30ம் தேதி விஸ்வரூப புண்யாஹம், ஆராதனம், ஹோமம் செய்து, 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் பாலபிம்ப பிரதிஷ்டை திருப்பணி துவக்க விழா நடக்கிறது.