பதிவு செய்த நாள்
30
நவ
2012
11:11
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நாளை துவங்குகிறது. விருச்சிக ராசியில் இருந்து ராகு பகவான் துலாம் ராசிக்கும், ரிஷப ராசியில் இருந்து, கேது பகவான் மேஷ ராசிக்கும் வரும், 2ம் தேதி காலை, 10.53 மணிக்கு பெயர்ச்சி அடைய உள்ளனர். முன்னதாக நாளை காலை, 6 மணிக்கு நவக்கிர அபிஷேகம், விநாயகர் வழிபாடு, மகாசங்கல்பம், லட்சார்ச்சனை நடக்கிறது. வரும் 1ம் தேதி நவக்கிரக அபிஷேகம், லட்சார்ச்சனையும், 2ம் தேதி காலை, 6 மணி முதல் லட்சார்ச்சனை, ராகு, கேது மூலமந்திரயாகம், கலசாபிஷேகம், காலை, 10.53 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.