பதிவு செய்த நாள்
01
டிச
2012
10:12
திருக்கோவிலூர்: பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 94ம் ஆண்டு ஜெயந்தி விழா, நேற்று துவங்கியது. பிரதான் மந்திரில் காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், சுவாமியின் மூலமந்திரங்கள், ஆயுஷ்ய ஹோமம் நடந்தது. காலை, 10:30 மணிக்கு பக்தர்கள் பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களை, பகிர்ந்து கொண்டனர். மாலை, 3:30 மணிக்கு திருவாசக செம்மல், மயிலை ஸ்ரீ சற்குருநாத ஓதுவார் குழுவினரின் தேவாரம், 5:15 மணிக்கு, யோகி ராம்சுரத்குமார் வித்யாலயா மாணவர்களின் பாடல், நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இரண்டாம் நாளான, இன்று காலை, 7:00 மணிக்கு, பிரதான் மந்திரில் கடஸ்தாபனம், பூஜைகள், ஏகாதச ருத்ர ஜபம், அபிஷேகம், அர்ச்சனை, பூஜைகள் நடக்கின்றன. காலை, 10:30 மணிக்கு விழா அரங்கில் பஜனை, மாலை, 4:00 மணிக்கு, விஜயலட்சுமியின் பரத நாட்டியம் நடக்கிறது. இதனையடுத்து, ஸ்ரீ மதி பங்கஜம் தாசின் இசை நிகழ்ச்சி, ஸ்ரீரமாகாந்தராய் எழுதிய, "பரமாத்மாவுடன் ஆத்மா சந்திப்பு என்ற நூலின், தமிழ் மற்றும் இந்தி மொழி பதிப்புகள் வெளியீடு நடக்கிறது. இரவு, 7:45 மணிக்கு வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா, ஆரத்தி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஜஸ்டிஸ் அருணாசலம் செய்து வருகிறார்.