பதிவு செய்த நாள்
14
ஜன
2025
03:01
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடுவாயூர் அருகே உள்ள கேரளபுரம் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில், இரு நாள் தேர்த்திருவிழா நேற்று தொடங்கியது.
நேற்று, நள்ளிரவு, 1:30 மணிக்கு கோவில் மேல்சாந்தி மகேஸ்வர குருக்கள் தலைமையில் பூர்ணாபிஷேகம் நடந்தது. காலை, 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், ரத பூஜை, ரக் ஷாதாரணம், யாத்ரா தானம் ஆகியவை நடந்தது. காலை, 6:00 மணிக்கு உற்சவர் திருத்தேரில் எழுந்தருளும் ரதாரோகண நடைபெற்றது.
அதன்பின், காலை, 8:30 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க, திருமஞ்சனம் நடந்தது. மதியம், 2:00 மணிக்கு திருத்தேரோட்டம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு பஜனை, மூலவருக்கு தீபாராதனையும், இரவு, 7:00 மணிக்கு நிறுவனம் சதீசன் மாரார் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட ‘பாஞ்சாரிமேளம் என்ற செண்டை மேளம் நிகழ்ச்சி நடந்தது.
திருவிழாவின் இரண்டாம் நாளான, இன்று காலை, 7:30 மணிக்கு கோகுல தெருவில் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறும். மதியம், 12:30 மணிக்கு திருத்தேரோட்டம் துவங்கும். இரவு, 8:00 மணிக்கு பிரம்மாண்ட வான வேடிக்கை, பஜனை, ஆசிர்வாதம், தீபாராதனை நடைபெறும். இரவு, 11:00 மணிக்கு பெருவனம் கூட்டன் மாரார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளும் ‘பாண்டிமேளம் என்ற செண்டை மேளம் நிகழ்ச்சி நடக்கிறது.