Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரு மாதத்திற்குப் பிறகு ... மஹா கும்ப மேளா; திரிவேணி சங்கமத்தில் புனித நீராட குவியும் பக்தர்கள் மஹா கும்ப மேளா; திரிவேணி சங்கமத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி பீடாதிபதி ஜன.16ல் யாத்திரை மஹா கும்பமேளாவில் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
சிருங்கேரி பீடாதிபதி ஜன.16ல்  யாத்திரை மஹா கும்பமேளாவில் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

15 ஜன
2025
12:01

சிருங்கேரி பீடாதிபதி விதுசேகர பாரதீ சுவாமிகள், ஜன. 16 முதல் பிப். 13 வரை வட இந்தியாவில் விஜய யாத்திரை செய்ய உள்ளார். சிருங்கேரியிலிருந்து ஜன.16ல் புறப்படும் சுவாமிகள், பெங்களூரூ, பெல்லாரி, ஹோஸ்பேட் வழியாக 24ல் பிரயாக்ராஜ் சென்றடைந்து, மஹா கும்பமேளாவில் பங்கு கொள்கிறார். ஆதி சங்கரர், தெற்கில் சிருங்கேரியில் சாரதா பீடம், மேற்கில் துவாரகையில் துவாரகா பீடம், வடக்கில் பதரியில் ஜோஷி மடம், கிழக்கில் புரியில் கோவர்தன பீடம் என நான்கு ஆம்னாயபீடங்களை நிறுவினார். இம்மடங்களின் பீடாதிபதிகளாக உள்ள நான்கு சங்கராசார்ய சுவாமிகளின் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பில் கலந்து கொள்கிறார்.


சிருங்கேரி மடம் சார்பில் நடக்க உள்ள சாஸ்த்ர சம்மேளனம், வேத சம்மேளனம் ஆகியவற்றையும் பிரயாக்ராஜ் சிருங்கேரி மட கிளையில், ஸ்ரீ சாரதாம்பாள், கணபதி, ஆதிசங்கரர் எழுந்தருளி இருக்கும் கோவிலின் கும்பாபிஷேகத்தையும் நடத்தி வைக்கிறார்.அங்கிருந்து ஜன., 31ம் தேதி வாரணாசி சென்றடைகிறார். காசியில் அன்னபூர்ணா கோயிலின் கும்பாபிஷேகம், கோடி குங்குமார்ச்சனை, சஹஸ்ர சண்டி ஹோமம், மஹா ருத்ர ஹோமம், சாஸ்த்ர சம்மேளனம், வேத சம்மேளனம் ஆகியவை ஸ்ரீ மடம் சார்பாக நடைபெற உள்ளன. பிப்., 9ல் அயோத்தி செல்லும் சுவாமிகள் 11ம் தேதி வரை அயோத்தியில் தங்கி ஸ்ரீ ராமர் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். பின்னர், 11ல் கோரக்பூர் சென்றடைந்து பின் பிப்., 13ல் சிருங்கேரி வந்தடைகிறார். ஏற்பாடுகளை சிருங்கேரி மடத்தின் தலைமை அதிகாரி பி.ஏ.முரளி செய்து வருகிறார்.  -நமது நிருபர்–

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar