மஹா கும்ப மேளா; திரிவேணி சங்கமத்தில் புனித நீராட குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2025 12:01
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் மஹா கும்ப மேளா நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா என்பதால் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிகின்றனர். முதல் நாளில் ஒன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடினர். மகா சங்கராந்தியான நேற்று அம்ரித் ஸ்நானம் எனப்படும் புனித நீராடல் நடந்தது. இதில் கலந்து கொள்ள கூடுதலாக பக்தர்கள், சாதுக்கள் வந்தனர். சுமார் மூன்றரை கோடி பேர் இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.