பதிவு செய்த நாள்
17
ஜன
2025
04:01
திருவள்ளூர்; திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம் வரும், 24ல் துவங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது. வீரராகவர் கோவிலில் ஆண்டுக்கு இரு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகிறது. தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த தினம் என்பதால் தை பிரம்மோற்வம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தை பிரம்மோற்சவம், வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, பிப்.2 ம் தேதியுடன் நிறைவடைகிறது. தினமும் காலை, மாலை இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா வருவார்.
உற்சவம் விவரம்: நாள்– விசேஷம்ஜன.24– கொடியேற்றம், காலை 5:00 மணி, தங்க சப்பரம் காலை 7:00 மணி, சிம்மவாகனம், இரவு 7:00மணிஜன.25– ஹம்ஸ வாகனம், காலை7:30 மணி, சூரிய பிரபை, இரவு 7:00 மணிஜன.26- கருட சேவை, கோபுர தரிசனம் காலை5:00மணி, திருவீதி புறப்பாடு காலை 7:00 மணி, ஹனுமந்த வாகனம், இரவு 8:00 மணிஜன.27– சேஷ வாகனம், காலை7:00 மணி, சந்திர பிரபை, இரவு 7:00 மணிஜன.28– நாச்சியார் திருக்கோலம் காலை 5:00 மணி, யாளி வாகனம் இரவு 7:00ஜன.29– தைஅமாவாசை, ரத்னாங்கி சேவை, காலை 5:00–12:00 மணி வரை. சூர்ணாபிஷேகம் மாலை 3:30 மணி, வேணுகோபாலன் திருக்கோலம் வெள்ளிச்சப்பரம்–மாலை 4:30 மணி. யானை வாகனம் இரவு8:30 மணிஜன.30– தேர் புறப்பாடு காலை 7:00மணி, திருமஞ்சனம்–மாலை 6:30 மணி, கோயிலுக்கு எழுந்தருளல் இரவு 9:00 மணி.ஜன.31– திருப்பாதம் சாடி திருமஞ்சனம், மாலை 3:30 மணி, குதிரை வாகனம், இரவு 7:30 மணிபிப்.1– ஆள்மேல் பல்லக்கு, காலை5:00 மணி, தீர்த்தவாரி,காலை11:00 மணி, விஜயகோடி விமானம்,இரவு 7:00 மணிபிப்.2– த்வாதச ஆராதனம்,மதியம்12.030 மணி,வெட்டிவேர் சப்பரம், இரவு8:00 மணி, த்வஜஅவரோஹணம் இரவு 10.00 மணி.