பதிவு செய்த நாள்
17
ஜன
2025
04:01
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், தை முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு, அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
திருக்கோவிலூர், தெற்கு வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், உத்தராயண மகர முதல் வெள்ளிக்கிழமை அதாவது தை மாத முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு இன்று காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு அர்ச்சனை, சோடசோபவுபச்சார தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆரிய வைசிய சங்க தலைவர் வாசுதேவன், துணைத் தலைவர் கோல்டுரவி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.