பதிவு செய்த நாள்
20
ஜன
2025
10:01
திருச்செந்தூர்; சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தை உத்திர வருசாபிஷேகம் விழா வெகு விமர்சியாக நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப் பட்டு , நடைபெற்றது விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இரண்டு முறை வருசாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஒன்று ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று வரக்கூடிய ஆனி வருஷாபிஷேகம். இன்னொன்று தை மாதத்தில் உத்திர வரக்கூடிய தை உத்திர வருஷாபிஷேகம். நேற்ற தை உத்திர வருஷாபிஷேகம் விழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடந்தது. கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து, குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு மேளதாலங்கள் முழங்க கொண்டுவரப்பட்டு சரியாக காலை 8.15 மணிக்கு மூலவர், விமான கலசதிற்கு புனித நீர் ஊற்ற பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சண்முகர் விமான கலசத்திற்கு, பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு வருசாபிஷேகம் நடந்தது. மூலவர், வள்ளி, தெய்வானை ஆகிய சந்நிதிகளின் விமானங்களுக்கு போத்திமார்கள் மூலமும், சுவாமி சண்முகர் விமானத்துக்கு சிவாச்சாரியார்கள் மூலமும், வெங்கடாஜலபதி சந்நிதி விமானத்துக்கு பட்டாச்சாரியார்கள் மூலமும் புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் சிறப்பாக நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த தை உத்திரவருஷாபிஷேக விழாவில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.