பதிவு செய்த நாள்
22
ஜன
2025
04:01
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாத்தில் சுவாமி விவேகானந்தர், 163வது ஜெயந்தி விழா நடந்தது.
இங்குள்ள புத்தர் மைதானத்தில் காலை மங்கள ஆரத்தியுடன் விழா தொடங்கியது. வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் விழாவை துவக்கி வைத்தார். பஜனை, ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சியில், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் தத்பாஸானந்தர், சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு பற்றியும், சுவாமி விவேகானந்தர் கூறிய கருத்துக்களையும் எடுத்துக் கூறினார். தொடர்ந்து, ராமகிருஷ்ணர் கோவிலில் பெரியநாயக்கன்பாளையம் பஜனை குழுவின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. வித்யாலயா கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் பங்கு பெற்ற பஜனை நிகழ்ச்சிகளும், வேதா பாராயணமும் நடந்தது. முடிவில் மகா ஹோமமும், ஆரத்தி நிகழ்ச்சியும் நடந்தன. விழாவில், ராமகிருஷ்ண வித்யாலயா சுவாமிஜி பெருமக்கள், வித்யாலயா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.