ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் தாயுமானவ சுவாமிகளின் குருபூஜை விழா நடந்தது. ராமநாதபுரம் வெளிப்பட்டணம் லட்சுமிபுரத்தில் தாயுமானவ சுவாமி தபோவனம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குருபூஜை தை மாதம் விசாக நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. இதன்படி இவ்வாண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு ஜன.,21, 22ல் தாயுமானவர் பாடல் முற்றோதுதல் நடந்தது. இன்று தாயுமானவர் சுவாமி குருபூஜை விழாவில் ஸ்படிக லிங்கத்தின் வாயிலாக தாயுமானவ சுவாமிக்கு அபிஷேகம், பஜனை நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராத்தில் தீபாராதனையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.