கோவை; தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை என்.ஹெச். ரோடு - டவுன்ஹால் சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் மீன் வடிவ சின்னத்துடன் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், கோவை, பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.