சிறுவன் நரேனின் மனதில் இரு விதமான சிந்தனை அடிக்கடி தோன்றும். ஒன்று பெரிய வேலையில் சேர்ந்து நிறைய பணம் சம்பாதித்து வாழ்வது. மற்றொன்று துறவியாக ஆன்மித்தில் ஈடுபடுவது. இளைஞனாக வளர்ந்த நரேன், ஆன்மிக வாழ்வைத் தேர்ந்தெடுத்து ‘விவேகானந்தர்’ என்னும் வீரத் துறவியாக மாறினார். இரண்டும் நன்மைக்கான வழி தான் என்றாலும் உலக ஆசைகளில் ஈடுபடுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி தற்காலிகமானது. கடவுளை அறியும் இன்பம் நிரந்தரமானது. அனைவரின் மனதிலும் இந்த இரண்டும் வந்து நிழலாடுகின்றன. விவேகம் உள்ளவன் ‘சிரேயஸ்’ என்னும் ஆன்மிக வாழ்வையும், சாமானிய மனிதன் ‘பிரேயஸ்’ என்னும் உலக வாழ்வையும் தேர்ந்தெடுக்கிறான் என்கிறது கடோபநிஷதம்.