எட்டையபுரத்தில் நடக்க இருந்த தம்பியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக இசை மேதை முத்துசுவாமி தீட்சிதர் மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்தார். சாத்துாரில் இருந்து எட்டையபுரம் செல்லும் வழியெங்கும் வறட்சி நிலவியது. மக்கள் வறுமையால் வாடுவதைக் கண்டு வருந்தினார் தீட்சிதர். அம்பிகை மீது அமிர்தவர்ஷினி ராகத்தில் பாட தொடங்கினார். சிறிது நேரத்தில் குளிர் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. தீட்சிதர் பயணம் செய்த மாட்டு வண்டியின் சக்கரம் சேற்றில் புதைந்தது. மீண்டும் பாடி மழையை நிற்கச் செய்தார். மக்கள் தீட்சிதரின் தெய்வீக சக்தியை அறிந்து நன்றி தெரிவித்தனர். ‘எல்லாம் அவள் செயல். அம்பிகையைச் சரணடைந்து நலமுடன் வாழ்க” என வாழ்த்திப் புறப்பட்டார்.