பதிவு செய்த நாள்
26
ஜன
2025
12:01
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் நடந்த, 10,008 விளக்கு பூஜையில், கோவில் வளாகம் முழுவதும் தீப ஒளியால் ஜொலித்தது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பில், 69வது ஆண்டு, அன்னதான விழா, நேற்றுமுன்தினம் துவங்கியது. இன்று வரை, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை, கோவில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. காலையில் விநாயகர் பூஜையும், அதனைத்தொடர்ந்து, நவகிரக அபிஷேகம் பூஜையும் நடந்தது. மாலையில், கோவில் வளாகம் முழுவதும் தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, 10,008 விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.