Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 37 அடி உயர ஸ்ரீராமர் பட்டாபிஷேக ... மஹா கும்பமேளாவில் எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளே.. குவியும் பக்தர்கள் மஹா கும்பமேளாவில் எங்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரதத்தின் வேற்றுமையில் ஒற்றுமை கலாச்சாரமே இனி உலகத்திற்கான எதிர்காலம்; சத்குரு பேச்சு
எழுத்தின் அளவு:
பாரதத்தின் வேற்றுமையில் ஒற்றுமை கலாச்சாரமே இனி உலகத்திற்கான எதிர்காலம்; சத்குரு பேச்சு

பதிவு செய்த நாள்

27 ஜன
2025
10:01

தொண்டாமுத்தூர்; கோவை ஈசா யோகா மையத்தில் நடந்த குடியரசு தின விழாவில், பாரதத்தின் வேற்றுமையில் ஒற்றுமை கலாச்சாரம் சாதாரண விஷயம் அல்ல. இனி இதுவே உலகத்தின் எதிர்காலம் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.


கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன்பு, 76வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துகொண்டு, மூவர்ணக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து நடந்த விழாவில், சத்குரு பேசுகையில்,"நம் நாட்டில் யார் அரசர், யார் அதிகாரத்தில் இருக்கிறார் என்பது பற்றி மக்கள் கவலைப்படவில்லை. இங்கு மக்கள் தான் அதிகாரத்தில் இருந்தனர். இது எப்போதுமே ஜனநாயக நாடாக இருந்து வருகிறது. யார் ஆட்சியில் இருந்தாலும், நமது கலாச்சாரமும், நாகரீகமும், மாறாமல் அப்படியே இருந்தது. அதுவே, இந்த தேசத்தின் முக்கியமான மற்றும் தத்துவமான அம்சமாக இருக்கிறது. கலாச்சார ரீதியாக, ஆன்மீக பாதையில் செல்ல விரும்பிய யாவரும், கிழக்கை நோக்கியே வந்தார்கள். இங்கு கிழக்கு என்றால் இந்தியா. ஒரு காலத்தில் இங்கு, 30 சதவீத மக்கள் வெறுமனே, உள்முகமாக திரும்பும் ஆன்மீக பாதைக்காக அர்ப்பணிக்கப்பட்டு இருந்தார்கள். இதை இப்போது நடைபெறும் கும்பமேளாவில் நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். மிகப்பெரிய அளவிலான மக்கள் தொகை வாழ்வில் வேறெந்த விஷயத்திற்காகவும் இல்லாமல், வெறுமனே உள்முகமாக திரும்புவதற்காக அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.


நாம் ஏன் ஹிந்து என அழைக்கப்பட்டோம். காரணம், வடக்கில் ஹிமாலய மலைப்பகுதி இருக்கிறது. தெற்கில் இந்திய பெருங்கடல் இருக்கிறது. இதனை ஹிந்து சாகரம் என அழைத்தோம். ஹிமாலய பகுதியையும், ஹிந்து சாகரமும் இணைந்து ஹிந்து என்றானது. இந்த நிலத்தை ஹிந்து என அழைத்தோம். அதனால், இங்கு வாழ்ந்த மக்கள், ஹிந்துக்களானார்கள். ங்கு, ஒரு குடும்பத்தில் இருக்கும் ஐந்து மக்களுக்கு பத்து கடவுள்கள் இருக்கிறார்கள். வேற்றுமைகள் ஒருபோதும் நமக்கு பிரச்சனைக்கான அடித்தளமாக இருந்ததில்லை. இது சிறிய விஷயம் இல்லை. இன்று உலகம் இதனை கற்று வருகிறது. நம் பாரதத்தின் வேற்றுமையில், ஒற்றுமை தான் இனி உலகத்தின் எதிர்காலமாக இருக்க போகிறது. இது போன்ற விஷயங்களில், பல்வேறு வகைகளில் இந்தியா தலைமை வகிக்கிறது,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: அயோத்தி கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
 ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar