திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வெள்ளி வேலுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2025 11:01
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு வெள்ளி வேலுக்கு அபிஷேகம் நடந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சுப்பிரமணியருக்கு பழநி யாத்திரை செல்லும் பக்தர்களால் தைப்பூச விழா ஜன. 5 முதல் துவங்கி சஷ்டி,கார்த்திகை தினங்களில் முருகனுக்கு அபிஷேகம் நடந்து வருகிறது. நேற்று காலை 9:30 மணிக்கு மூலவர் சுப்பிரமணியர், வெள்ளிவேலுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் விபூதிக் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. பின்னர் வேலுக்கு அன்னாபிஷேகம் நடந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெள்ளிவேல் பிரகாரம் வலம் வந்து அன்னத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. ஜன.29 ல் மாலையில் 108 சங்காபிஷேகம், பிப். 3ல் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். தொடர்ந்து பிப். 5ல் பக்தர்கள் பழநிபாதயாத்திரை புறப்படுகின்றனர். மறுநாள் மூலவருக்கு பஞ்சாமிர்த சிறப்பு அபிஷேகமும், பிப்.11ல் தைப்பூச சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.