Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரமாண்ட மஹா கும்பமேளாவில் தினமும் ... சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை தேரோட்டம் கோலாகலம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் முருக பக்தர்களுக்கு தொடர்ந்து மன வேதனை; சிரவை ஆதீனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் முருக பக்தர்களுக்கு தொடர்ந்து மன வேதனை;  சிரவை ஆதீனம்

பதிவு செய்த நாள்

27 ஜன
2025
11:01

கோவை; ‘‘தமிழகத்தில் முருக பெருமானுக்கும், முருக பக்தர்களுக்கும் தொடர்ந்து மன வேதனையை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,’’ என, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கூறியுள்ளார்.


அகில உலக முருக பக்தர் பேரவை தலைவர், கோவை சரவணம்பட்டி சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், ‘தினமலர்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: தமிழகத்தின் முதன்மை கடவுளாக முருகப்பெருமான் போற்றப்படுகிறார். நக்கீரர், அருணகிரிநாதர் போன்றவர்களால் அருளி செய்யப்பட்ட, திருமுருகாற்றுப்படை, திருப்புகழில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபடை வீடுகளில் முதன்மையான வீடான திருப்பரங்குன்றத்தில், முருகபெருமான் வீற்றிருக்கும் மலையில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுஉள்ளன. பல ஆண்டுகளாக வேற்று மதத்தினர் அங்கு வழிபாடு செய்து வந்தாலும், திடீரென சமீபத்தில் மாமிச உணவுகள் எடுத்துச் சென்று, அங்கு தயாரித்து பரிமாறுவது மனவலியை ஏற்படுத்திஉள்ளது. இறை வழிபாடு என்பது பொதுவான ஒன்று. மற்றவர்களின் வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தக்கூடாது. திருப்பரங்குன்றம் மலைக் கோவிலை மீட்பதற்காக முருக பக்தர்கள் கூட்டமைப்பு மற்றும் ஹிந்து அமைப்புகள் ஒருங்கிணைந்து முயற்சி செய்வதை வரவேற்கிறேன். அங்கு குறிப்பிட்ட மதத்திற்கான வழிபாட்டு நெறிமுறைகள் இருக்கிறதா, இல்லையா என்பதை ஆய்வு செய்ய கோர்ட் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் முருக பெருமானுக்கும், முருக பக்தர்களுக்கும் தொடர்ந்து மன வேதனையை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பழனி முருக பெருமானை தரிசிப்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச திருநாளில் பாதயாத்திரை மேற்கொள்வர். ஆங்காங்கே பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தை தரப்பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு வருத்தம்அளிக்கிறது. இந்த விஷயங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar