Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாசி வெங்கடாஜலபதி பெருமாள் ... தை அமாவாசை; அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை தை அமாவாசை; அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை; சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்.. பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்கினர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தை அமாவாசை; சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்.. பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்கினர்

பதிவு செய்த நாள்

29 ஜன
2025
04:01

திருப்புல்லாணி; மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் ஆடி, தை, அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தை அமாவாசை அன்று பித்ருலோகம் புறப்படும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகச் சிறந்த பலனை அளிக்கும்.


சேதுக்கரையில் உள்ள மன்னார் வளைகுடா கடலில் இன்று காலை 4:00 மணி முதல் தொடர்ந்து காலை 11:00 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை புரோகிதர்கள் மூலம் நிறைவேற்றினர். இன்று காலை முதல் கடற்கரை வளாகம் முழுவதும் ஏராளமான புரோகிதர்கள் அமர்ந்திருக்க முன்னோர்களுக்கு பக்தர்கள் பித்ரு கடன் பூஜைகளை செய்தனர். சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அருகே உள்ள வெள்ளைப் பிள்ளையார் மற்றும் தமிழ் மாமுனிவர் அகத்தியருக்கு சிதறு தேங்காய் உடைத்து பூஜைகளை செய்தனர். திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் உற்ஸவமூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் சாற்று முறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பசுக்களுக்கு பச்சரிசி, வெல்லம், அகத்திக்கீரை உள்ளிட்டவைகளை வழங்கினர். காகங்களுக்கு அன்னமிட்டனர். தை அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான போலீசார் மற்றும் மெரைன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar