சபரிமலையில் இந்தாண்டு வருமானம் ரூ.440 கோடி; கடந்தாண்டை விட ரூ.80 கோடி அதிகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2025 12:01
கம்பம்; சபரிமலை கோயிலில் இந்தாண்டு வருமானம் ரூ.400 கோடி என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ௹. 80 கோடி அதிகமாகும்.
சபரிமலை அய்யப்பன் கோயில் நடை ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் 5 நாட்கள் திறந்து, பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இருந்த போதும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் தேதி நடை திறந்து தை மாதம் அடைப்பார்கள். மகர விளக்கு மண்டல பூஜை சீசன் என்றழைக்கப்படும் இந்த இரண்டு மாத சீசனில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். இந்தாண்டு இதுவரை இல்லாத அளவிற்கு பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருந்தது. கடைசி 3 நாட்கள் ஸ்பாட் புக்கிங்கை நிறுத்தும் அளவிற்கு பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இந்தாண்டு 2 மாத சீசனில் வருவாய் ௹, 440 கோடி என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இது கடந்தாண்டை விட ௹. 80 கோடி அதிகமாகும். கடந்தாண்டு வருமானம் ரூ.360 கோடியாகும். இந்தாண்டு மகர விளக்கு மண்டல பூஜை சீசனில் மொத்தம் 6 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளார்கள் என்றும் 18 ம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 முதல் 90 பக்தர்கள் ஏறி சென்றார்கள் என்றும், இது கடந்தாண்டு 65 பக்தர்களாக இருந்தது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.