பதிவு செய்த நாள்
03
பிப்
2025
11:02
மதுரை: திருப்பரங்குன்றத்தில் நாளை (பிப்.4) ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில், மதுரையில், இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயில் மற்றும் தர்காவில் வழிபட தடையில்லை. அதேசமயம் தர்காவில் ஆடு, கோழி உயிர்பலி கொடுக்க சிலர் முயன்று வருகின்றனர். இதற்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே மலையை காக்க, நாளை (பிப்.,4) அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நாளை மாலை 4:00 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
அனுமதி மறுப்பு: இந்நிலையில், இந்த ஆர்ப்பாடம் நடத்துவதற்கு போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம், என மதுரை நகர் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்துள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சில நாட்களாக இரு வேறு பிரிவினர்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்பட்டும், அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் விசாரணை நடந்து வருகிறது. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையிலும் இருபிரிவினர் சார்பில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் பிப்.,4 ல் ஹிந்து முன்னணி நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.