பிரயாக்ராஜில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு ஊஞ்சல் சேவை; சரஸ்வதி அலங்காரத்தில் ஸ்ரீனிவாச சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2025 11:02
பிரயாக்ராஜ்; பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் அமைத்த ஸ்ரீவாரி சம்பத் கோயில் வளாகத்தில் இன்று வசந்த பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீனிவாச சுவாமிக்கு சிறப்பு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. வேத அறிஞர்களின் வேத மந்திரங்களுக்கு மத்தியில், ஸ்ரீ சுவாமி சரஸ்வதி மற்றும் வீணை பாணி அலங்காரத்தில் ஊஞ்சலில் பக்தர்களுக்குத் தோன்றினார். இந்த நிகழ்வில், அன்னமாச்சார்யா திட்டக் கலைஞர்கள் அன்னமாச்சார்யா சங்கீர்த்தனங்களைப் பாடினர். ஏராளமான பக்தர்கள் சுவாமியின் ஊஞ்சல் சேவையை பரவசத்துடன் தரிசனம் செய்தனர். விழாவில் துணை அலுவலர் சிவ பிரசாத், இந்து தர்ம பிரச்சார பரிஷத் கூடுதல் செயலாளர் ராம் கோபால், ரவி மற்றும் பிற அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.