பதிவு செய்த நாள்
10
பிப்
2025
07:02
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் தைப்பூச தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.
பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ரத வீதி, பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப்.,5,ல் கொடி கட்டி மண்டபத்தில் வள்ளி, தேய்வானை, முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி கொடி கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழாவில் புதுச்சேரி சப்பரம், தந்த பல்லாக்கு, வெள்ளி ஆட்டுக்கடா,பெரிய தங்கமயில், காமதேனு, தங்க குதிரை, வெள்ளி யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.
நேற்று(பிப்.9ல்) வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக பழநிக்கு வந்த பக்தர்கள் மலை கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் கட்டண மற்றும் பொது தரிசன வழியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். வின்ச், ரோப்கார் ஸ்டேஷன்களில் பல மணி நேரம் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தியிருந்தனர். பக்தர்களின் வருகை அதிகம் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று (பிப்.,10 ல்) ஆறாம் நாள் திருவிழாவில் காலை 9:15 மணிக்கு மேல் தந்த பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் இரவு 7:00 மணிக்கு மேல் இரவு 8:30 மணிக்குள் நடைபெறும். அன்று இரவு 9:00 மணிக்கு மேல் வெள்ளி தேரோட்டம் ரத வீதிகளில் நடைபெற உள்ளது. நாளை (பிப்.,11ல்) அதிகாலையில் தோளுக்கினியானில் சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெறும். மதியம் 11:15 மணிக்கு மேல் மதியம் 12:00 மணிக்குள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நடைபெறும். மாலை 4:45 மணிக்கு தைப்பூச திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் ரதவீதிகளில் நடைபெறும். பிப்.,14 அன்று மாலை தெப்பத் தேர் திருவிழா நடைபெறும். அன்று இரவு கொடி இறுக்குதலுடன் திருவிழா நிறைவடையும். மேலும் பழநி கிரிவிதி குடமுழுக்கு விழா அரங்கத்தில் தைப்பூச கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.