Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளைவயல் காளி கோயில் ... வடலுார் சத்திய ஞான சபாவில் தைப்பூச கொடியேற்றத்துடன் துவங்கியது வடலுார் சத்திய ஞான சபாவில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் கும்பாபிஷேக விழா பாலாலயம் பூஜையுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் கும்பாபிஷேக விழா பாலாலயம் பூஜையுடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

10 பிப்
2025
05:02

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் இன்று பாலாலயம் பூஜைகளுடன் துவங்கியது. கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களான மலை மேல் காசி விசுவநாதர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், மலை அடிவாரத்திலுள்ள பழனி ஆண்டவர் கோயில், புதிய படிக்கட்டில் உள்ள படிக்கட்டு விநாயகர் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில், பாம்பலம்மன் கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழுவினர் தீர்மானம் நிறைவேற்றினர். கும்பாபிஷேக பணிகள் துவங்கும் வகையில் நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை முதல் காலை யாகசாலை பூஜை நடந்தது. இன்று காலை ராஜகோபுரம், கோவர்த்தனாம்பிகை விமானம், வல்லப கணபதி விமானம், காசி விஸ்வநாதர் கோயில் விமானம், பழனி ஆண்டவர் கோயில் விமானம், சொக்கநாதர் கோயில் விமானங்களில் இருந்து சக்தி கலை இறக்கம் செய்யப்பட்டு வரைபடங்களில் கலை ஏற்றம் செய்யப்பட்டது. அந்த வரைபடங்கள் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜகோபுரம், வல்லப கணபதி, கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு யாகசாலை அமைக்கப்பட்டு பூஜை நடந்தது. அதேசமயம் உப கோயில்களிலும் தனித்தனியாக யாகசாலை அமைத்து பூஜையில் நடந்தது. பின்பு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மூலம் உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான பணிகளை திருப்பணிகள் நேற்று துவங்கியது. பாலாலயம் பூஜையில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர் மணிச் செல்வம், தி.மு.க., தெற்கு மாவட்ட துணை செயலாளர் பாலாஜி கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar