பாலக்காடு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2025 03:02
பாலக்காடு; பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கேரள மாநிலம் பாலக்காடு நகர் அருகே உள்ளது வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு எல்லா ஆண்டும் தைப்பூச உற்சவம் கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் இன்று காலை நடை திறந்ததும் துவங்கியது. அதிகாலை 4:00 மணிக்கு நிர்மல்ய தரிசனம், 4:15 மணிக்கு அபிஷேகங்கள், 4:30 மணிக்கு கணபதி ஹோமம், 5:30 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 6:00 சோபனா சங்கீதம், 7:00 மணிக்கு உஷ பூஜை, 7:30க்கு காவடி எழுந்தருளும் வைபவம் ஆகியவை நடந்தது. 8:00 மணிக்கு காவடி பூஜை, அபிஷேகங்கள நடைபெற்றது. தொடர்ந்து 9:30 மணிக்கு குனிச்சேரி அணியன் மாரார் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட கலைஞர் கலந்து கொண்ட பஞ்சவாத்தியம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்து முத்துமணி குடைகள் சூடிய ஐந்து யானைகளின் அணிவகுப்பில் "காழ்ச்சீவேலி நடந்தது. இதை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தன. 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மூலவருக்கு மகாதீபாராதனை நடந்தது. பஞ்சவாத்தியம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்பில் உற்சவர் புஷ்பப் பல்லத்தில் எழுந்தருளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு அத்தாழ பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்ததோடு உற்சவம் நிறைவடைகிறது.