700 ஆண்டுகள் பழமையான சிலைகள் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2025 11:02
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த திருவதிகையில் பள்ளம் தோண்டியபோது 700 ஆண்டுகள் பழமையான பார்வதி, சண்டிகேஸ்வரர் சிலைகள் கிடைத்துள்ளன. பண்ருட்டி அடுத்த திருவதிகை குணபரேஸ்வரர் கோவிலில் திருப்பணிக்காக அறநிலையத்துறை சார்பில் பணிகள் நடந்து வருகிறது. நேற்று காலை கோவில் சுற்றுப்புற மதிற்சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அங்கு பார்வதி சிலை, சண்டிகேஸ்வரர் சிலைகள் கிடைத்தன. பார்வதி அம்மன் சிலை 5அடி உயரமும் கொண்ட தாகவும், தனது வலது மேல் கரத்தில் கோடாரியும், வலதுகீழ்கரத்தில் அபயஹஸ்தத்திலும். இடது மேல்கரத்தில் சங்கும், இடது கீழ் கரத்தில் வரதஹஸ்த கோலத்தில் உள்ளார். சண்டிகேஸ்வரர் 3 அடி உயரம் கொண்டதாகவும் இருந்தார். இதுகுறித்து வரலாற்று தொல்லியியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறுகையில், இச்சிலை கி.பி.13 முதல் 14ம் நுாற்றாண்டை சேர்ந்த காடவராயர் ஆட்சி காலத்தில் கலைநயத்துடன் உள்ளது. இவை 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலையாகும் என்றார். கண்டெடுக்கப்பட்ட இரு சிலைகளும் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் இருசுவாமி சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்படும் என அறநிலையத்துறை சார்பில் தெரிவித்தனர்.