குலதெய்வ கோயில்களில் மகாசிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2025 10:02
உசிலம்பட்டி; உசிலம்பட்டி பகுதி கிராமங்களில் உள்ள குலதெய்வ கோயில்களில் மகாசிவராத்திரி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த வழிபாட்டில் பங்கேற்க வாழ்வாதரத்திற்காக வெளியூர் சென்றவர்கள் வழிபாடு செய்ய வருவார்கள். திருவிழாவிற்காக கோயில்கள் சுத்தம் செய்யும் பணிகள் துவங்கியது. பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மகாசிவராத்திரி மாசிப்பச்சை திருவிழா நடத்துவதற்கான 15 ஆம்நாள் கூடுகை நேற்று மாலை 4.00 மணியளவில் பாப்பாபட்டியில் நடைபெற்றது. எட்டும் இரண்டும் பத்து தேவர்கள், ஐந்து பூசாரிகள், கோடாங்கிகள், அக்கா மக்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்காளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருவிழா நடத்துவதற்கு முடிவு செய்துள்ளோம். பூசாரிகள் தரப்பில் இதற்கு சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருவிழாவிற்கு கொல்லிமலைராக்கு, பிரம்மகுலராக்கு சிலை செய்வதற்காக அனைவரும் இணைந்து மண் எடுத்து கொடுத்தனர்.