மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூச தெப்ப திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2025 10:02
சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று விமரிசையாக துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சென்னை, மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில் குளத்தில், ஆண்டுதோறும் தைபூசத்தை முன்னிட்டு, மூன்று நாள் தெப்பத் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. நாளை வரை நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணி முதல் 10:00 மணிவரை நடக்கிறது. தெப்பத் திருவிழாவின் முதல் நாளான நேற்று, கற்பகாம்பாள் உடன் கபாலீஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளி, உலா வந்து அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கபாலீஸ்வரரின் அருளைப் பெற்றனர். இன்றும் நாளையும், வள்ளி, தெய்வானையுடன், சிங்காரவேலர் தெப்பத்தில் வலம் வந்து அருள் பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.