ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா; குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2025 10:02
கோவை; பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் பங்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. விழாவில் நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு உப்பாற்றங்கரையில் கும்பஸ்தாபனம் நடந்தது. இதில், அம்மன் உருவத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண், சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோவில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது. பின் மகா பூஜை நடைபெற்றது. நேற்று காலை, குண்டம் கட்டுதல், மாலையில் சித்திரத்தேர் வடம் பிடித்தல் மற்றும் இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (14ம்தேதி) முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.