பதிவு செய்த நாள்
14
பிப்
2025
10:02
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். காரமடை அருகே குருந்தமலையில், மிகவும் பழமையான ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட, குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றம், 5ம் தேதி நடந்தது. கடந்த, 11ம் தேதி மாலை தேரோட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று ஆறுமுக காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வைபவம் நடந்தது. காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், சோமையனூர், அன்னூர் உட்பட சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், காவடிகளை எடுத்து வந்து, குருந்தமலையை சுற்றி வந்து மலையேறி சுவாமிக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று கொடி இறக்கமும், மதியம் சந்தன காப்பு உற்சவம் பூர்த்தியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகனப்பிரியா, அறங்காவலர்கள் குழந்தைவேலு, சாவித்திரி, சுரேஷ்குமார், முருகன் மற்றும் செயல் அலுவலர் வனிதா ஆகியோர் செய்து வருகின்றனர்.