பழநியில் சுவாமி தரிசன செய்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2025 04:02
பழநி; பழநிக்கு வருகை புரிந்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்த பின் நாட்டு மக்கள் நலமாய் இருக்க பிரார்த்தனை செய்ததாக கூறினார்.
பழநி கோயிலுக்கு ஆந்திர மாநில துணை முதல்வர் போலீசார் பாதுகாப்புடன் வருகை புரிந்தார். ரோப் கார் மூலம் முருகன் கோயிலுக்கு சென்றார். அங்கு கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின் உச்சி கால பூஜையில் பங்கேற்றார். பூஜை முடிந்தபின் போகர் சன்னதியில் வழிபட்டார். கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அதன் பின் அவர் கூறியதாவது," பழநி திருப்பதிற்கு சிறப்பு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் பழநி திருப்பதி இடையே ரயில் போக்குவரத்தை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். பழநியை திருப்பதிக்கு இணையாக மாற்ற பேசி நடவடிக்கை எடுக்கப்படும் திருப்பதி லட்டு விவகாரத்தில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கடவுள் விஷயத்தில் யாரும் இப்படி பண்ணக்கூடாது. தமிழகத்தில் இந்த ஆன்மீக யாத்திரை மிகவும் சந்தோசமாக உள்ளது. தேசத்திற்கு தமிழக மக்களுக்கு பொதுமக்களுக்கு அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என பிரார்த்தனை செய்துள்ளேன்." என்றார்.