நத்தம் முத்தாலம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2025 08:02
நத்தம்; நத்தம் அருகே முளையூரில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று இரவு முளையூரில் செய்யப்பட்ட முத்தாலம்மன் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு கண் திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் அக்னிசட்டி, அலகு குத்துதல், மாவிளக்கு,கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.விழாவில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முளையூர் ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.