Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் மத்திய ஊரக ... அருள் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா அருள் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்ணில் புதைந்த கி.பி. 13ம் நூற்றாண்டு சிவன் கோயில்
எழுத்தின் அளவு:
மண்ணில் புதைந்த கி.பி. 13ம் நூற்றாண்டு சிவன் கோயில்

பதிவு செய்த நாள்

19 பிப்
2025
03:02

பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கீழப்பார்த்திபனூரில் மண்ணில் புதைந்த கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயில் ஆவணப்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.


12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் ஏராளமான சிவன் கோயில்கள் கட்டடக்கலை மற்றும் இந்து சமய பண்பாட்டிற்கு சான்றாக உள்ளது. இதன்படி பரமக்குடி அருகே கீழப்பார்த்திபனூரில் கி.பி.13 அல்லது 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும், பட்டீஸ்வரமுடைய அய்யனார் கோயில் இருக்கிறது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு கால பூஜை திட்டத்தில் வருகிறது. தொடர்ந்து கோயிலின் கோபுரங்கள் சிதைந்த நிலையில், சுமார் 6 அடி வரை கோயில் சுற்றுப்பகுதி தெரியாத வகையில் மண்ணில் புதைந்துள்ளது. மேலும் கோயிலையொட்டி கண்மாய் கரை உயர்த்தப்பட்டு ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதனை புனரமைக்கும் வகையில் 2022ம் ஆண்டு மே மாதம் சீரமைப்பு பணிக்காக ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பின்பு, தற்போது தொல்லியல் துறை சார்பில், புதைந்த கோயிலின் பகுதிகளை ஜே.சி.பி., மூலம் தோண்டி எடுக்கின்றனர். மேலும் ஒவ்வொரு கற்களுக்கும் எண்கள் எழுதப்பட்டு, அவற்றை ஆவணப்படுத்தி, கோயில் உயர்த்தி கட்ட உபயதாரர்கள் மூலம் பணிகள் நடப்பதாக துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல் கள்ளிக்கோட்டை சிவன் கோயில் உள்ளிட்ட சிதைந்த அனைத்து கோயில்களையும் புனரமைக்க வேண்டும், என ஆன்மிக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருதுநகர் ;ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை ; ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 50,000 வளையல் அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துாரில் வாழ்ந்த பெரியாழ்வார் ஆடிப்பூர நன்னாளில் துளசிச்செடியின் அடியில் தெய்வக் ... மேலும்
 
temple news
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar