Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் மாவட்ட கோவில்களில் மகா ... கேதார்நாத் கோவில் மே 2ல் திறப்பு; பத்ரிநாத் மே 4ல் திறப்பு கேதார்நாத் கோவில் மே 2ல் திறப்பு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா கும்பமேளா நிறைவு ; ஒவ்வொரு இந்தியருக்காகவும் பிரார்த்தனை செய்வேன்.. பிரதமர் மோடி நெகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
மகா கும்பமேளா நிறைவு ; ஒவ்வொரு இந்தியருக்காகவும் பிரார்த்தனை செய்வேன்.. பிரதமர் மோடி நெகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

27 பிப்
2025
11:02

பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடந்து வந்த மகா கும்பமேளா நிறைவடைந்தது; மொத்தம், 44 நாட்களில் சுமார் 65 கோடி பேர் புனித நீராடினார்; கடைசி நாளில் ஒரு கோடியே 44 லட்சம் பக்தர்கள் தரிசினம் செய்துள்ளதாக உ.பி., அரசு தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக இன்று யோகி ஆதித்யநாத் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சமத்துவத்தின் மாபெரும் திருவிழா, மஹா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. பிரயாக்ராஜில் ஜனவரி 13ம் தேதி துவங்கி, மகாசிவராத்திரி நாளான இன்று (பிப்.,26) வரை, மொத்தம் 45 நாட்களில், 66 கோடியே 21 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். இது உலக வரலாற்றிலேயே முக்கியமானது. கும்பமேளா நிகழ்ச்சி தெய்வீகமாகவும், மகத்தானதாகவும் மாறி உலகம் முழுவதும் ஒற்றுமையை எடுத்துரைக்கிறது. இந்த சாதனைக்கு காரணமான அனைத்து மக்களுக்கும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவிக்கிறேன். உள்ளாட்சி நிர்வாகம், போலீசார், துப்புரவுப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்றி. அன்னை கங்கை, கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். இவ்வாறு உ.பி., முதல்வர் தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி கூறியதாவது; மகா கும்பமேளா நிறைவடைந்துள்ளது... ஒற்றுமைக்கான மகா யாகம் நிறைவடைந்துள்ளது. பிரயாக்ராஜில் நடந்த ஒற்றுமைக்கான மகா கும்பமேளாவில் 140 கோடி நாட்டு மக்களின் நம்பிக்கை 45 நாட்கள் ஒன்றுகூடி, இந்த ஒரு விழாவில் இணைந்த விதம் மிகப்பெரியது! 


மகா கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வெறும் சாதனை மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வலுவாகவும் வளமாகவும் வைத்திருக்க வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.


இந்த ஒற்றுமைக்கான மகா கும்பமேளாவை வெற்றியடையச் செய்ய நாட்டு மக்களின் கடின உழைப்பு, முயற்சிகள் மற்றும் உறுதியால் ஈர்க்கப்பட்டு, பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் முதல் ஜோதிர்லிங்கமான ஸ்ரீ சோமநாதரை நான் தரிசிக்கப் போகிறேன். பக்தியின் அடையாளமாக எனது சங்கல்ப புஷ்பத்தை சமர்ப்பித்து, ஒவ்வொரு இந்தியருக்காகவும் பிரார்த்தனை செய்வேன். நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் இந்த தடையற்ற ஓட்டம் தொடர்ந்து ஓட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar