பதிவு செய்த நாள்
27
பிப்
2025
03:02
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவில் சிவபெருமான் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
திருவெண்ணெய்நல்லூரில் உள்ள 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா நடைபெற்றது. அதனை ஒட்டி நேற்று இரவு 7:00 மணிக்கு முதல் கால பூஜையும், 10:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு 1:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்றது. விழாவில் ஒவ்வொரு கால பூஜைகளிலும் சிவபெருமானுக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தி பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. விழாவில் திருவெண்ணெய்நல்லூர் சாய் நட்சத்திர நாட்டியாலயா குழு சார்பில் சிறுமிகள் நாடகம் மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சென்னை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல் திருமுண்டீஸ்வரம் கிராமத்தில் உள்ள சிவலோகநாதர் கோவில் தென்மங்கலம் கிராமத்தில் உள்ள சீட்டப்பட்டீஸ்வரர் கோவில் டி. எடையார் கிராமத்தில் உள்ள மருதீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.