சங்கராபுரம் சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2025 04:02
சங்கராபுரம்; சங்கராபுரம் சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சங்கராபுரம், சன்னதி தெரு, சங்கர லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு நடந்தது.இதையொட்டி நான்கு கால பூஜைகள் மற்றும் சுவாமிக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின் பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. இதேபோல சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில்; தேவ பாண்டலம் பாண்டுவேஸ்வரர் கோவில்; முக்கனுர், மஞ்சபுத்துர் சிவன்; ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.