ராமேஸ்வரம் முதல் காசி வரை 2500 கி.மீ., பக்தர்கள் பாதயாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2025 10:03
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் முதல் காசி வரை 2500 கி.மீ., தூரம் பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை சேர்ந்த பாத யாத்திரை பக்தர்கள் 25 பேர்நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்து காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பாதயாத்திரை பயணத்தை துவக்கினர். இவர்கள் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ம.பி., உ. பி., மாநிலங்கள் வழியாக 2500 கி.மீ., நடந்து சென்று ஜூன் 28ல் காசியை சென்றடைகின்றனர். இந்த பாதயாத்திரை பக்தர்கள் தினமும் 20 முதல் 25 கி.மீ., தூரம் நடந்து செல்கின்றனர். இரவில் ஓய்வெடுத்து பகலில் நடந்து செல்வார்கள் என ராமேஸ்வரம் பாதயாத்திரை பக்தர்கள் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் தெரிவித்தார்.