பதிவு செய்த நாள்
06
மார்
2025
11:03
ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீஅப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகளின் 100வது திருநட்சத்திர பூர்த்தி விழா, ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீஎம்பார் ஜீயர் மடத்தில் மார்ச் 1ம் தேதி துவங்கியது. எம்பார் ஜீயர் மடத்தின் 11வது மடாதிபதியாக பொறுப்பேற்று, 18 ஆண்டுகாலம் மடத்தின் நிர்வகித்தும், வைணவ சம்பிரதாயங்களை பொதுமக்கள் மற்றும் சிஷ்யர்களிடம் எடுத்து சென்று, பகவத் ஸ்ரீராமானுஜர் வழியில் சமூகத்தை பயணத்து சென்றவர். வெள்ளையனே வெளியேறும் இயக்கத்தில் பங்கேற்ற ஜீயர் சுவாமிகள், தன் வாழ்க்கையை தேசத்திற்கும், தெய்வீகத்திற்கும் அர்ப்பணித்து, தமிழகம் முழுதும் பாதையாத்திரையாக 3,000 கி.மீ., பயணித்து, வைணவத்தை பரப்பினார். 100வது திருநட்சத்திர பூர்த்தி விழாவை முன்னிட்டு, எம்பார் ஜீயர் சுவாமியின் மடத்து சிஷ்யர்கள் மற்றும் அபிமானிகள் 5 நாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இறுதி நாளான நேற்று, சேவாகா சாற்றுமுறை, ஜீயர் சுவாமிகளின் திருஉருவ படத்துடன் மாடவீதி உலா நடந்தது.