பதிவு செய்த நாள்
06
மார்
2025
01:03
பழனி; பழனி முருகன் கோவில் தலைமை அலுவலகத்தில் நவபாஷாண சிலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் நடந்து.
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் உள்ள நவபாஷாண சிலை பாதுகாப்பு குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. குழுவின் ஆய்வு கூட்டம் நேற்று கோவில் அலுவலகத்தில் நடந்தது.
நீதிபதி பொங்கியப்பன் கூறியதாவது: முருகன் நவபாஷாண சிலை பாதுகாப்பது, வலுப்படுத்துவது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இது வழக்கமான ஆய்வு கூட்டம் தான். இம்முறை ஐ.ஐ.டி.,யிலிருந்து வல்லுநர்கள் வந்தனர். கடந்த முறை நடந்த சோதனை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலை உறுதியுடன் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை குமரகுரு சுவாமிகள், சிவகங்கை பிச்சை குருக்கள், எம்.எல்.ஏ., செந்தில்குமார், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, கோவில் இணை கமிஷனர் மாரிமுத்து, முன்னாள் இணை கமிஷனர் நடராஜன் பங்கேற்றனர்.