பதிவு செய்த நாள்
07
மார்
2025
11:03
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே கொங்கலப்பம்பாளையம் காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. பொள்ளாச்சி அருகே கொங்கலப்பம்பாளையம் காளியம்மன் கோவிலில் கடந்த,3ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கோடந்துார், கொடுமுடி, காவிரி, தெய்வகுளம் காளியம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட ஸ்தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. பின்னர், அம்மனுக்கு அபிேஷகம் நடைபெற்றன. கும்பம் ஊர்வலம் கொண்டு வரப்பட்டதுடன், அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. தொடர்ந்து, மாவிளக்கு, பூவோடு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீராடுதல் மற்றும் அம்மன் சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.