சூலக்கல் மாரியம்மன் கோவிலில் வெள்ளி சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2025 01:03
கோவை; கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் சூலக்கல் மாரியம்மன் கோவிலில் மாசி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் ஒரு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.