பதிவு செய்த நாள்
12
மார்
2025
11:03
பழநி; பழநி மாசி திருவிழாவில் மாரியம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொரிதல் ரதம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது.
பழநி மாசித் திருவிழாவில் மாரியம்மன் கோயில் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு பழநி, அடிவாரம், வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொரிதல் ரதம் அலங்கரிக்கப்பட்டது. பாத விநாயகர் கோயில் முன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கீதா குத்துவிளக்கு ஏற்றினார். கந்த விலாஸ் விபூதி ஸ்டோர் செல்வகுமார் ரத ஊர்வலத்தை துவங்கி வைத்தார். டி.எஸ்.பி., தனஜெயன் முன்னிலை வகித்தார். ரதம் பூக்களால் வடிவமைக்கப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பாத விநாயகர் கோவிலில் துவங்கிய ஊர்வலம் சன்னதி வீதி, பஸ் ஸ்டேண்ட், திண்டுக்கல் ரோடு, காந்தி மார்க்கெட் ரோடு, பெரிய கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்தது. சங்கத் தலைவர் மூர்த்தி, நிர்வாக கமிட்டி தலைவர் முருகானந்தம், சபாநாயகர் செல்வம், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ், நகரத் தலைவர் ஆனந்தகுமார், சரவண ரியல் எஸ்டேட் விஸ்வநாதன், தி.மு.க நகர செயலாளர் வேலுமணி, கவுன்சிலர் சுரேஷ் அ.தி.மு.க., நகர செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.